திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சாடிய எடப்பாடி
Edappadi K. Palaniswami Criticized TN Interim Budget 2026 : திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இதனால் பல்வேறு துறையினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி விட்டது
பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி காட்டியிருக்கிறோம் .
2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கைகூட நிறைவேற்றவில்லை. திமுகவினர் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்கிறார்கள் என்று சாடியுள்ளார்
மேனா மினுக்கி உரை
அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த அரசு இன்று வரை ஏமாற்றியிருக்கிறது .
கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த முழுக்க மேனா மினுக்கி உரையாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் நிதி சுமை மற்றும் நிதி பற்றாக்குறை
இவ்வாறான நிலை தொடர்ந்தால் மக்களின் மீதி வரிச்சுமை அதிகரிக்கும் என்றும் ,இதை போலத்தான் நிதி நிலைமையை சரிசெய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
கடன்சுமை அதிகரிப்பு
ஆனால், அதன் பின்புதான் கடன் அதிகரித்துள்ளது. மேலும் வேளாண் பட்ஜெட் எனக் கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
அத்திப்பழ சொத்தை
அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். இதற்கு உதாரணம் இந்த நிதிநிலை அறிக்கை என்று விமர்சித்துள்ளார்
வரவு செலவு திட்டம் பற்றி சரியான விளக்கம் ஏதும் இல்லை
மேலும் வரவு செலவு திட்டம் பற்றி தெளிவான எந்த ஒரு விளக்கமும் நடவடிக்கைகளும் இல்லை எனவும் ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்ற நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார்கள்.
ஆனால் ஐந்து வருடங்களில் மொத்தமாகவே 140 நாட்கள் தான் சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கும் என கருதுகிறேன் என் இடைக்கலை பட்ஜெட் குறித்து விமர்சித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி