https://x.com/vaigaichelvan
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது - வைகைச்செல்வன் பேட்டி

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

MTM

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனை, வைகைச்செல்வன் சந்தித்துப்பேசினார். தான் எழுதிய புதிய புத்தகத்தை அவருக்கு அளித்ததுடன், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் , திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது முதல்கட்டம். அடுத்தடுத்த கட்டத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இதை அடிக்கோடிட்டு சொல்கிறேன். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பலர் வருவார்கள்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த வைகைச்செல்வன், பூவை ஜெகன்மூர்த்தி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார் என்று கூறினார்.