Ahead of the assembly elections, the AIADMK has announced 10 additional promises google
தமிழ்நாடு

இளைஞர்கள் பைக் வாங்க 10,000, கேபிள் டிவி கட்டணம் 50% குறைப்பு’ : அதிமுக கூடுதல் வாக்குறுதிகள்...

சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அதிமுக கூடுதலாக 10 வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறது.

Kannan

அதிமுக வாக்குறுதிகள்

சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே 297 வாக்குறுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, கூடுதலாக 10 வாக்குறுதிகள் அறிவிக்கப்படுவதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி,

* கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும்,

* இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்

* மா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை

• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் ‘அத்துக்கட்டு’ பண்டிகையை, பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை

• கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

• பனைத் தொழிலாளர்கள், பனை மரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

• கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.

• பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கண்காணிக்க 24/7 வார் ரூம் மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்படும்.

• மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக, தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

• இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால், ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களில் உரிமம்

* வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

===============