This election will be the final election for the DMK - Edappadi Palaniswami! google
தமிழ்நாடு

இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்- எடப்பாடி பழனிசாமி!

திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Baala Murugan

எடப்பாடி பழனிசாமி உரை

edappadi speech மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது. நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.

ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான். இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம், என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்க்கின்றனர்

தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் பெற்றோம். கேட்ட நிதி, திட்டங்களை கொடுத்தார்கள். அதிகமான பாலத்தை கொடுத்தது மத்திய அரசு. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை வழங்கினார்கள்.

மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2க்கு அனுமதி பெற்று 63 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதி வழங்கியது. அதற்கு மத்திய அமைச்சர் நேரடியாக அடிக்கல் நாட்டினார். இது மத்திய அரசு வழங்கும் திட்டம். அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். நிறைய திட்டத்தை கொடுத்தனர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்க்கின்றனர்; பெரும் ஊழல் செய்கின்றனர்.உலக தலைவர்கள் பாராட்டும் வகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. என்று தெரிவித்துள்ளார்.