AIADMK MP Inbadurai alleged that Chennai is reeling under rainwater, despite spending Rs.4,000 crore for stormwater drainage project Parliament House in New Delhi
தமிழ்நாடு

4,000 கோடி செலவு, மிதக்கிறது சென்னை : இன்பதுரை குற்றச்சாட்டு

AIADMK MP IS Inbadurai Parliament Speech : மழைநீர் வடிகால் திட்டதிற்கு ரூ.4,000 கோடி செலவிட்டும் மழை நீரில் சென்னை தத்தளிக்கிறது என்று அதிமுக எம்பி இன்பதுரை குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Kannan

தமிழக விவசாயிகள் பாதிப்பு

AIADMK MP IS Inbadurai Parliament Speech : ராஜ்யசபா உறுப்பினரான அவர் இன்று அவையில் உரையாற்றுகையில், “ தமிழ்நாட்டில் டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக அரசே காரணம்

இந்த பாதிப்பு வெறும் இயற்கை பேரிடரால் மட்டுமே ஏற்படவில்லை, திமுக அரசின் அலட்சிய போக்காலும், போதிய முன்னெச்சரிக்கை இல்லாததாலும் நிகழ்ந்து இருக்கிறது.

திமுக அரசின் அலட்சியத்தால் பாதிப்பு

எனது சொந்த தொகுதியான திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தூர்வாரும் பணியில் மெத்தனம்

பருவமழை தொடங்குவதற்கு முன்பே டெல்டா பகுதிகளில் உள்ள கண்மாய், கால்வாய்களை தூர் வாரும்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தினார்.

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை

டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, மழை காரணமாக சென்னையும் மழை நீரில் தத்தளிக்கிறது. ரூ.4,000 கோடி செலவிட்டும் சென்னையின் மழைநீர் வடிகால் திட்டம் முற்றிலுமாக இந்த பிரச்ஞினையை தீர்க்கவில்லை.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று அதிமுக எம்பி இன்பதுரை கேட்டுக் கொண்டார்.

====