AIADMK Releases First List of Candidates: 20 Former Ministers Given Opportunity; EPS to Contest from Edappadi source : google
தமிழ்நாடு

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு : எடப்பாடியில் இபிஎஸ் போட்டி!

AIADMK Candidate List 2026 : எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.

S Kavitha

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

AIADMK Candidate List 2026 : அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதன்படி 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.

நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், வேப்பனஹள்ளியில் முனுசாமி, திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசன், தொண்டமுத்தூரில் எஸ்.பி. வேலுமணி, குமாரபாளையத்தில் பி. தங்கமணி, மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் கே. ராஜு, பாப்பிரெட்டிப்பட்டி கே.பி. அன்பழகன், விராலிமலை டாக்டர் சி. விஜயபாஸ்கர், கோவில்பட்டியில் கடம்பூர் சி. ராஜு ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் முழுமையான பட்டியல் !

1. எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி,

2. வேப்பனஹல்லி: கேபி முனுசாமி

3. திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன்

4. நத்தம்- நத்தம் விசுவநாதன்

5. தொண்டாமுத்தூர் ; எஸ். பி. வேலுமணி

6. குமாரபாளையம் -பி. தங்கமணி

7. ராயபுரம் -டி. ஜெயக்குமார்

8. மயிலம்- சி. வே. சண்முகம்

9. மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜு

10. பாப்பிரெட்டிபட்டி கே. பி. அன்பழகன்

11. நன்னிலம் - ஆர். காமராஜ்

12. வேதாரண்யம் -ஓ. எஸ். மணியன்

13. விராலிமலை -டாக்டர் சி. விஜயபாஸ்கர்

14. கோவில்பட்டி: கடம்பூர் சி. ராஜு

15. திருவடானை: ஆர். உதயகுமார்

16. சிவகங்கை : கே. டி. ராஜேந்திரபாலாஜி

17. மதுரவாயல்: பா. பெஞ்சமின்

18. களசபாக்கம்: தி அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி

19. திருப்பரங்குன்றம்: . வி. வி. ராஜன் செல்லப்பா

20. பவானி: கே. சி. கருப்பண்ணன்

21. ஜோலார்பேட்டை : கே. சி. வீரமணி

22. கரூர்: எம். ஆர். விஜயபாஸ்கர்

23. அரியலூர்: தாமரை எஸ். ராஜேந்திரன்

20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள 23 பேரில் 16 பேர் MLA வாக உள்ளனர். மேலும் மாநிலங்களவை எம்பியாக இருக்கும் சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். கிட்டத்தட்ட 20 முன்னாள் அமைச்சர்களுக்கு முதற்கட்ட பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு நிலவரம்

இதுவரையில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18, அமமுக 11, தமாகா 5, தமமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

======