நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், 2 நாள் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து உயிரிழந்தார்.
திருப்புவனம் காவலர்கள் தாக்கியதின் காரணமாக அஜித் குமாரின் மண்டை ஓடு முதல் கால் பாதம் வரை 18 இடங்களில் காயம் இருந்தது உடற்கூராய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உடலின் வெளிப்புறம் மட்டுமில்லாமல் உடலின் உட்புறங்களிலும் இரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் காவல் துறையினரால் தாக்கப்பட்ட அஜித்குமார் உடல் ரீதியாகப் பலமாக தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடற்கூராய்வு முடிவைத் தொடர்ந்து, விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணையின் போது இருந்த 6 குற்றப்பிரிவு காவலர்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
===