All 6 candidates from Tamil Nadu who contested the Rajya Sabha elections 2026 have been unanimously elected google
தமிழ்நாடு

Rajya Sabha Elections 2026 : தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட ஆறு பேர் : ஒருமனதாக தேர்வு

Rajya Sabha Elections 2026 Tamil Nadu : ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட 6 பேரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Kannan

ராஜ்யசபா தேர்தல்

Rajya Sabha Elections 2026 Tamil Nadu : 10 மாநிலங்களில் காலியாகும் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு ராஜ்யசபாவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல்

அந்த வகையில் தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 இடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 பேரையும், அதிமுக 2 பேரையும் தேர்வு செய்யலாம்.

தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதிகடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி ( இன்று ) கடைசி நாளாகும்.

திமுக சார்பில் நான்கு பேர்

அதன்படி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக)...

அதிமுக சார்பில் இரண்டு பேர்

தம்பிதுரை (அதிமுக), அன்புமணி (பாமக) ஆகிய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு, மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு

அதன் அடிப்படையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், 6 பேரும் ஓரிரு நாட்களில் ராஜ்யசபா எம்பிக்களாக பொறுப்பேற்பார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்கே சுதீஷ் முதன்முறையாக நாடாளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்கது.

======================