கொலை பிண்ணனி
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருகிறது இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்
இது குறித்து முதல்வர் விஜய் தெரிவித்திருப்பதாவது
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன்
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
விரைவான விசாரணை
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்.
இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த கொலை சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
==================