Allegations of fraud involving promises to secure government jobs have landed former Minister Sivasankar in trouble AI generated
தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி? : புகாரில் சிக்கிய ”முன்னாள் அமைச்சர் சிவசங்கர்” : குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக, எழுந்துள்ள குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Kannan

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர்.

சிவசங்கர் மீது புகார்

இவர் மீது ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ சீனிவாசன் என்பவர் காவல் ஆணையகரத்தில் புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரில் எனது மகனுக்கு போக்குவரத்து துறையில் அரசு வேலை பெற்று தருவதாக கூறி அப்போதைய அமைச்சராக இருந்த சிவசங்கர் ரூபாய் 23 லட்சம் பணம் கேட்டார்.

ரூ. 23 லட்சம் மோசடியா?

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி

இதற்கு ஒப்புக்கொண்டு, தற்போதைய அமைச்சராக இருந்த சிவசங்கரின் நெருங்கியவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இளஞ்செழியன் என்பவரின் வங்கி கணக்கில் அந்த தொகையை நான் செலுத்தினேன்.

சிவசங்கர் உறுதி அளித்தாரா?

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரி நேரில் சந்திக்கவும் இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார். அப்போது என் மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதியாகி விட்டது.

எந்த கவலையும் வேண்டாம் விரைவில் பணி நியமன ஆணை உங்களுக்கு கிடைக்கும் என்று அப்போதைய அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். பணம் தன்னிடம் வந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

வேலை கொடுக்காமல் அலைகழிப்பு

ஆனால், இதுவரை தன்னுடைய மகனுக்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்ட போது சரியான பதில் வரவில்லை. தொடர்ந்து அலைகழிக்கப்பட்டேன்.

சட்ட நடவடிக்கை - மனுதாரர் கோரிக்கை

பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு இதுவரையும் வேலை வழங்காமல் இளஞ்செழியனும் அமைஞ்சே சிவசங்கரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் சீனிவாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

விசாரணை வளையத்தில் சிவசங்கர்

இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளஞ்செழியன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கருக்கு சம்மன்

அரசு வேலை மோசடி புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு உற்ற பிரிவு காவல்துறையினர் சம்ம்ன் அனுப்பியுள்ளனர்.

செந்தில் பாலாஜி வழக்கு

ஏற்கனவே, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

எ. வ. வேலு மீது வழக்கு

திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு மீது நெடுஞ்சாலை துறையில் டெண்டர் முறைக்கேட்டில் ஊழல் செய்துள்ளதாக அண்மையில் புகார் எழுந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் திமுகவை சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் விஜய் எச்சரிக்கை

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய முதல்வர் விஜய், பார்ட்டி பண்ட் குறித்து குற்றம்சாட்டி இருந்தார். நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம்.. ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம்.. ஊழல் செய்யவும் விடமாட்டோம் என்று எச்சரித்து இருந்தார்.

======