Allegations of irregularities: Chief Minister Vijay issues a bold order cancelling 50 short-term tenders! google,ai
தமிழ்நாடு

முறைகேடு புகார்கள் : 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து : முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் விதிகளுக்குப் புறம்பாக கொண்டுவரப்பட்ட 20 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Kavitha prasanna

Allegations of irregularities: Chief Minister Vijay issues a bold order cancelling 50 short-term tenders!

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட 50 குறுகிய கால ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முந்தைய ஆட்சி டெண்டர்கள் மீது தீவிர ஆய்வு

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சி காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறை சார்ந்த டெண்டர்கள் குறித்து துறை வாரியாக மிக விரிவான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே முறைகேடு புகார்கள் எழுந்ததன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சியின் பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையின் பல்வேறு டெண்டர்களும் சமீபத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரத்து செய்யப்பட என்ன காரணம்?

நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் ஒப்பந்தப்புள்ளி (Tender) சமர்ப்பிக்க பொதுவாக விதிகளின்படி போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், விதிகளை மீறி வெறும் ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே மிகக் குறுகிய கால அவகாசம் அளிக்கப்பட்டு, பல்வேறு டெண்டர்கள் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளின் கீழ் விடப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

எந்தெந்த பகுதிகளில் டெண்டர்கள் ரத்து?

அதிகபட்சமாகத் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட 30 டெண்டர்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்...

  • கோத்தகிரி

  • செங்கம்

  • பெரம்பலூர்

  • திருவள்ளூர்

  • மணப்பாறை

திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் விதிகளுக்குப் புறம்பாக கொண்டுவரப்பட்ட 20 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட பணிகளின் விபரம்

இந்த டெண்டர்களில் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணி, வாரச் சந்தைக் கடைகள் ஏலம் மற்றும் புதிய போர்வெல் அமைக்கும் பணி உள்ளிட்ட உள்ளாட்சி சார்ந்த அத்தியாவசியப் பணிகள் அடங்கும்.

சென்னை உயர்நிலை சாலை திட்டமும் ரத்து?

இதற்கிடையே நேற்று ( ஜூலை 16) நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்படவிருந்த நான்கு வழித்தட உயர்நிலை சாலை அமைக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

======