Ambika Reacts to Radha’s ₹46-Crore Complaint; Says ‘The Allegation Is Shocking Google
தமிழ்நாடு

ராதா புகார் கொடுத்தது வேடிக்கையாக இருக்கிறது : "ஏமாந்தது நான் தான்" : கண்ணீருடன் அம்பிகா விளக்கம்..!

ரூ.46 கோடி மோசடி புகார் விவகாரத்தில் முதல் முறையாக விளக்கம் அளித்த நடிகை அம்பிகா, “ஏமாந்து போனது நான் தான். என் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது...

NARENDRAN K

நடிகை ராதா தனது அக்கா மீது புகார் :

நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி தொடர்பான புகாரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருக்கும் நிலையில், அதற்கு பதிலளித்த நடிகை அம்பிகா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.எஸ். கார்டன் விற்பனைக்கு இல்லை :

ராதாவின் புகார் குறித்து பேசிய அம்பிகா, “எங்களின் ஏ.ஆர்.எஸ். கார்டன் விற்பனைக்கு இல்லை.

அந்த இடம் தொடர்பாக சட்டப் பிரச்சனை நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது முழு விவரங்களையும் என்னால் பகிர முடியாது.

ஏ.ஆர்.எஸ். கார்டனின் பெயரை மாற்றி புதிய போர்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அந்த இடத்துடன் தனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பதாகவும், அதன் தற்போதைய நிலைமை தன்னை மனதளவில் பாதித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“ஏமாந்தது நான் தான்”

மேலும் பேசிய அம்பிகா, “குடும்பத்தில் பிரச்சனை வந்தால் அதை வெளியே சொல்ல விரும்பாத நபர் நான்.

காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் தேவையான விளக்கங்களை வழங்குவேன். அதன் பிறகு மக்களிடம் விரிவாக பேசுகிறேன்.

நான் தான் ஏமாந்து போய் புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் என் மீதே புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

இந்த புகார் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

பணம் தான் காரணம்?

அக்கா-தங்கை உறவு குறித்து உருக்கமாக பேசிய அம்பிகா, “நானும் ராதாவும் ஒரே மாதிரி உடை அணிந்து, மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள்.

ஆனால் மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்று நினைக்காத ஒரு விஷயம் பணம் தான்.

இன்று உறவுகளுக்குள் பிரச்சனை வருவதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

“என் மீது புகார் கொடுத்தது அதிர்ச்சி”

“நான் தான் ஏமாந்து போய் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் என் மீதே புகார் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த புகார் மிகவும் வேடிக்கையாக உள்ளது.

விசாரணைக்கு அழைத்தால் அனைத்து விளக்கங்களையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

உண்மை வெளிவந்த பிறகு மக்கள் அனைத்தையும் புரிந்து கொள்வார்கள்” என அம்பிகா கூறினார்.

====================