Amit Shah said that the dream of India alliance, Rahul as Prime Ministe, Udhayanidhi as Chief Minister, will never come true https://x.com/bjp4tamilnadu
தமிழ்நாடு

’ராகுல் PM, உதயநிதி CM’ வெறும் கனவுதான் : அமித் ஷா திட்டவட்டம்

ராகுலை பிரதமராகவும், உதயநிதியை முதல்வராகவும் திட்டமிட்டுள்ள இந்தியா கூட்டணியின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

Kannan

பாஜக பூத் கமிட்டி கூட்டம் :

திருநெல்வேலியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி எப்போதும் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசிப்பவர்.

ஆபரேஷன் சிந்தூர் பெரிய சாதனை :

மதத்தின் பெயரால் நடந்த பயங்கரவாத தாக்குதலை வேரோடு அழிப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட ஒவ் வொரு பயங்கரவாதியின் வீட்டுக்குள்ளும் புகுந்து அவர்களை அழித்து 'ஆப்ப ரேஷன் சிந்துார்' மூலம் சாதனை படைத்து இருக்கிறோம். இன்று உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.

எது நல்லாட்சி? அமித் ஷா விளக்கம் :

எது நல்லாட்சி என்பதை திருவள்ளுவர், திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். ஒரு நல்ல மன்னன் என்பவர், அருமையான குடிமக்கள், வலிமையான சேனை, நல்ல விளைநிலம் ஆகியவற்றைக் கொண்டு செயல் பட வேண்டும் என்பதை உணர்ந்து குறள் வழியில் பிரதமர் மோடி செயல்படுகிறார்.

பதவி பறிப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு :

நாடாளுமன்றத்தில் புதிதாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வரோ, பிரதமரோ யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் அந்த சட்டம். இதற்கு எதிர்கட்சிகள் ஏன் இந்த அளவு அச்சப்படுகின்றன எனத் தெரியவில்லை. இந்த சட்டத்தை, ஸ்டாலின், கருப்பு சட்டம் என்கிறார். இருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, இந்தச் சட்டம் பற்றி கூறத் தகுதியே இல்லை.

தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி :

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், அடுத்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி சாய்ப்போம். இதை சபதமாக ஏற்று செயல்படுவோம்.

ராகுல் பிரதமர், உதயநிதி முதல்வர் நிறைவேறாது :

தமிழகத்தில் உதயநிதியை முதல்வராக்க வேண்டும், மத்தியில் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும்' என்ற ஒரே நோக்கத்தில் இந்திய கூட்டணியினர் செயல்படுகின்றனர். அவர்கள் எண்ணம் ஈடேறாது. இவர்களின் திட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

============