ampaigning in the Maduranthakam and Dharapuram constituencies set to conclude tomorrow source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”நாளையோடு ஓய்கிறது பிரச்சாரம்” : மதுராந்தகம், தாராபுரத்தில் தலைவர்கள் முற்றுகை, தீவிர வாக்கு சேகரிப்பு...!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில், தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Kannan

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு மது​ராந்​தகம் (தனி) தொகு​தி​யில் வெற்றி பெற்ற மரகதம் குமர​வேல், தாராபுரம் (தனி) தொகு​தி​யில் வெற்றி பெற்ற சத்​ய​பாமா இரு​வரும் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தனர். பின்னர் தவெகவில் இணைந்தனர்.

இந்​நிலை​யில், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு தொகு​தி​களுக்​கும் இடைத்​தேர்​தல் நடத்​து​வதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டு, அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்கள்

மது​ராந்​தகம் தொகு​தி​யில் தவெக சார்​பில் மரகதம் குமர​வேல், திமுக சார்​பில் பரந்​தாமன், அதி​முக சார்​பில் கணிதா சம்​பத், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சுகந்​தி, நாம் தமிழர் கட்சி சார்​பில் ஜானகி​ராமன் மற்​றும் சுயேட்சி வேட்​பாளர்​கள் என 28 பேர் களத்​தில் உள்​ளனர்.

தாராபுரம் தொகு​தி​ வேட்பாளர்கள்

தாராபுரம் தொகு​தி​யில் தவெக சார்​பில் சத்​ய​பா​மா, திமுக சார்​பில் சுகன்​யா, அதி​முக சார்​பில் பானு​ம​தி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணன், நாதக சார்​பில் கார்த்​திகா உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

முதல்வர் விஜய் பிரசாரம்

தவெக வேட்​பாளரை ஆதரித்து முதல்​வர் விஜய் செப்​.25-ம் தேதி​யும் நேற்​றும் மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்​தார். முதல் நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் நேற்று, சாலைவலம் வந்து வாக்கு சேகரித்தார்.

கடந்த 30ம் தேதி தாராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்த முதல்​வர், மீண்​டும் நாளை அங்கு பிரச்​சா​ரத்​துக்கு செல்​கிறார்.

மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி பரப்புரை

அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி​ பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சிகளின் மாநில நிர்​வாகி​களும் பிரச்​சா​ரம் செய்கின்றனர். நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வருகிறார்.

நாளை ஓய்கிறது பிரச்சாரம்

தவெக. திமுக, அதி​முக கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் தொடர்ந்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரும் நிலை​யில், இரு தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் நாளை மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது.

இதனால், இறு​திக்​கட்ட வாக்கு சேகரிப்​பில் வேட்​பாளர்​களும் கட்சி நிர்​வாகி​களும் தீவிரம் காட்டி வரு​கின்​றனர்.

6ம் தேதி வாக்குப்பதிவு

அக்​.6-ம் தேதி வாக்​குப்​ப​தி​வும், 9-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யும் நடை​பெறுகிறது. வாக்​குப்​ப​திவையொட்​டி இரண்டு தொகு​களிலும் பலத்​த பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​பட்​டு உள்ளன.

இரண்டு தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் நிலையில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

=================