Anand, Aadhav Arjuna assured those who joined TVK from other parties will receive positions at appropriate time google
தமிழ்நாடு

"உரிய நேரத்தில் பதவிகள், பொறுமையா இருங்க" : மாற்றுக் கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா வாக்குறுதி...!

மாற்று கட்சியிகளில் இருந்து தவெகவிற்கு வந்தவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி கிடைக்கும் என்று, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா வாக்குறுதி அளித்துள்ளனர்.

Kannan

தவெகவில் மாற்று கட்சியினர்

சென்னையில் தவெக தலைமை அலுவலகமான பனையூரில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் இணைந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன். இவர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கே.கே. சிவசாமி (அருப்புக்கோட்டை), சுப்பிரமணியன் (திருவையாறு), சாந்தி ஏ. ராமு (குன்னூர்),...

திரைப்பட இயக்குநர் ஆர்வி உதயகுமார்(அதிமுக கலைப்பிரிவு முன்னாள் செயலாளர்), நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

நமது மக்கள் முன்னேற்ற கழகம்

இந்நிகழ்வில் பேசிய ஜெகன்நாத் மிஸ்ரா எம்எல்ஏ ”நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5 மாநிலங்களின் பொறுப்பாளர்கள் 3,000 பேர் தவெகவில் இணைந்துள்ளனர்” என்றார்.

உரிய நேரத்தில் பதவிகள்

நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே இணைய வரும் போது பதவி எதுவும் வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதிமுகவின் தவறு

செங்கோட்டையனை அதிமுக தூக்கி எறிந்தது. அது செங்கோட்டையனின் தவறு இல்லை.. அதிமுகவின் தவறு. இன்றைக்கு அவர் அமைச்சராக, சட்டசபை முன்னவராக இருக்கிறார்.

கொஞ்சம் பொறுமையாக இருங்க.. இந்த கட்சியில இன்னும் சிறப்பாக செயல்படலாம். தவெகவில் சேர்ந்தாலும் பதவிகள் கொடுக்கப்படவில்லை என சிலர் சொல்கின்றனர்..

இங்கே வியாபாரம் செய்யவில்லை. அதேநேரத்தில் மக்கள் சேவையை சிறப்பாக செய்யக் கூடிய மரியாதையை முதல்வர் விஜய் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பார்.

அதிமுக - திமுக சேர்ந்து விட்டன

அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டது. அதனால்தான் எடப்பாடி தொகுதியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவர் கூட தவெகவில் இணைந்திருக்கிறார்.

90% அதிமுக தவெக பக்கம் தான்

அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தவெகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக- தவெகவின் குறிக்கோள் எப்போதும் ஒன்றுதான்.

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- தவெக நிர்வாகிகள் இணைந்து 99 சதவீத இடங்களை கைப்பற்றுவோம்” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

=====================