anbumani plans to start new political party 
தமிழ்நாடு

ராமதாசுடன் மோதல் போக்கு : புதிய கட்சி தொடங்குகிறார் அன்புமணி!

ராமதாசுடனான மோதல் போக்கை தவிர்க்கும் வகையில், புதிய கட்சி ஒன்றை தொடங்க அன்புமணி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Kannan

பாமகவில் கட்சியின்நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே கருத்து வேறுபாடும், மோதல் போக்கும் நாளுக்கு நாள் புதிய வடிவங்களை எடுத்து வருகிறது.

அன்புமணி மீது ராமதாஸ் வைக்கும் குற்றச்சாட்டுகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டதாக, பெயரை குறிப்பிடாமல் ராமதாஸ் கூறி்னாலும், அவர் அன்பமணியை தான் குறிக்கிறார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

பொதுவெளியில் பேட்டி, அ்றிக்கை வடிவில் இருவுரும் மோதிக் கொள்வதால், பாமக இரண்டாக உடையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது,மோதலை தவிர்க்க, தனித்து இயங்குமாறு அன்புமணி தரப்பிடம் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் பேசிக் கொள்வது என்னவென்றால், பாமகவை நிறுவிய ராமதாசுக்கும் அவரது மகனுக்கும் இடையே சரிசெய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உக்கிரமடைந்துள்ளது. மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் விரும்பினார். ஆனால். அண்ணாமலை முயற்சியில், பாஜக கூட்டணியில் பாமகவை இடம்பெற வைத்தார் அன்புமணி.

இதனால், அதிமுக, பாஜக கூட்டணி இரண்டுமே படுதோல்வியடைந்தன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணியின் மனைவி சௌமியாவும் தோல்வி அடைந்தார். வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் கூட பாம, வெற்றி பெற முடியாதது, ராமதாசுக்கு கடும் வருத்தம்தான்.

இதன்காரணமாக அன்புமணி உடனான அவரது கருத்து வேறுபாடு நாளுக்குநாள் முற்றி, இன்று கடும் எதிர்ப்பு என்ற மனநிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தன் குடும்பத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாத ராமதாஸ், சௌமியாவின் அரசியல் நுழைவு குறித்தும் எரிச்சலில் இருந்தார். இப்படி பல பிரச்னைகள், அப்பா - மகனான, ராமதாஸ் - அன்புமணி இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்த, அன்புமணி விருப்பத்தை மீறி, தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் ஆக்கினார் ராமதாஸ். இதனால் ஏற்பட்ட மோதல் விரிசலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அன்புமணி இன்றி கட்சியை நடத்தவும், திமுகவுடன் கூட்டணி வைக்கவும் ராமதாஸ் தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

இதையடுத்து, அப்பாவோடு தொடர்ந்து மல்லுக்கட்டுவது சரியாக இருக்காது என முடிவெடுத்திருக்கும் அன்புமணி, தனிக்கட்சியாக செயல்படலாம் என்ற முடிவினை எடுத்து இருக்கிறார்.

அகில இந்திய பாட்டாளி மக்கள் கட்சி எனப் பெயர் வைத்து, தனித்து இயங்கலாம் என சிலர் கொடுத்த யோசனையும், அன்புமணி தீவிரமாக பரிசீலித்து வருகிறார்; இதற்காக சட்ட ரீதியான ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.

பாமகவின் அடிப்படை விதிகள், அன்புமணி தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டாலும், மோதல் போக்கை தொடராமல், ஒதுங்கிச்செல்ல அன்புமணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு பாமக வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

அப்படி நிகந்தால் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணி வைக்கலாம். அன்புமணி தொடங்கும் புதிய கட்சி, அதிமுக கூட்டணியில் இடம்பெறலாம்.

===========

=====