Andhra Pradesh CM Chandrababu Naidu on Bullet Train 
தமிழ்நாடு

தென்னிந்தியாவில் புல்லட் ரயில் சேவை : ஆந்திர முதல்வர் நாயுடு தகவல்

CM Chandrababu Naidu on Bullet Train: தென்னிந்தியாவில் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார்.

Kannan

அதிவிரைவு ரயில்கள் :

AP CM Chandrababu Naidu on Bullet Train : இந்தியாவில் நீண்ட தூர பயணங்களை சொகுசாக மேற்கொள்ளும் வகையில், வந்தே பாரத், துரந்தோ போன்ற விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் மிக நீண்ட தூர நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

புல்லட் ரயிலில் பயணித்த மோடி :

இந்தியாவிலும் இத்தகைய ரயில்களை இயக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஜப்பான் சென்ற பிரதமர் மோடியும் புல்லட் ரயிலில்(Bullet Train) இந்தபயணித்து, இந்த ரயிலை ஓட்ட பயிற்சி எடுக்கும் இந்திய ரயில்வே பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை 2027ம் ஆண்டு(Bullet Train in India Starting Year) தொடங்க இருக்கிறது. குஜராத்தில் இந்த ரயில் திட்டங்களுக்கான நிலைய கட்டுமானங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் புல்லட் ரயில் :

இந்தநிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு(Chandrababu Naidu), “ மிக விரைவில் தென்னிந்தியாவில் புல்லட் ரயில் சேவை வர இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை தெரிவித்தார். இதுபற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : ’புல்லட் ரயிலில் பிரதமர் மோடி’ : இந்திய ஓட்டுனர்களுடன் சந்திப்பு

சென்னை-ஐதராபாத் புல்லட் ரயில் :

இந்த புல்லட் ரயில், ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு(Chennai To Hyderabad Bullet Train) நகரங்களை இணைக்கும். மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் 2027ல் சேவை துவங்க இருக்கிறது. தென்னிந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் புல்லட் ரயில் சேவையை பயன்படுத்துவார்கள். இதன்மூலம் ரயில்வேத்துறையும் வேகமான வளர்ச்சியை எட்டும்” இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

======================