முதல்வர் பற்றி அவதூறு பேச்சு
முதலமைச்சர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக திமுக முன்னார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாக புகார் எழுந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
இது குறித்து தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ண கைது செய்யப்பட்டார்.
தவெகவில் இணைய நிர்பந்தம்
இதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெகவில் இணையச் சொல்லி என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
நான் திமுககாரன்
திமுகவிலேயே இருப்பேன். அதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என பகீர் குற்றச்சாட்டை அனிதா ராதாகிருஷ்ணன் முன்வைத்து இருந்தார்.
தவெக திட்டவட்டமாக மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டை தவெக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கமாட்டோம்.
உயர் நீதிமன்றம் முன்ஜாமினை ரத்து செய்யப்பட்டதாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
தவம் இருந்தாலும் சேர்க்க மாட்டோம்
தவம் இருந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் விஜயின் உழைப்புக்கு முன்னால் திமுகவினர் ஒரு பொருட்டே இல்லை.” என்று பதிலடி கொடுத்தார்.
=======================