Annamalai, chief mentor of the ‘We the Leaders’ organization, vowed change of government in TN is in 2031 AI generated
தமிழ்நாடு

“2031ல் மாற்றம் நிச்சயம், ஆட்சியை பிடிப்போம்” : TVK அரசை கைதூக்கி விடுவோம் : இந்தியன், இந்து, சூளுரைத்த அண்ணாமலை...!

தமிழகத்தில் 2031ல் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்று, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமை வழிகாட்டி அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

Kannan

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கினார்.

பொள்ளாச்சியில் முதல் மாநாடு

இதன் முதல் மாநாடு ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொண்டர்கள் கைகளை உயர்த்தி உறுதிமொழி ஏற்றனர்.

அண்ணாமலை பேச்சு

அமைப்​பின் தலைமை வழி​காட்​டி​யான அண்​ணா​மலை பேசி​ய​தாவது, “பொள்​ளாச்சி மண்​ணில் பெரிய எதிர்​பார்ப்​போடும் நம்​பிக்​கையோடும் எல்​லோரும் நின்று கொண்டு உள்​ளோம்.

போதைக்கு எதிராக கைகோர்ப்போம்

இது ஒரு மாவட்​டத்​தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான், உங்​கள் நம்​பிக்​கையை பார்க்​கும் போது எல்லா பக்​கமிருந்​தும் வந்​திருக்​கின்​றனர். இங்கு இருக்​கின்ற தன்​னார்​வலர் ஒரு​வரின் தந்தை தற்​பொழுது தான் உயி​ரிழந்​தார். அவர் குடிப்​பழக்​கத்​திற்கு உள்​ளானவர்.

அதை​யும் தாங்​கிக்​கொண்டு போதைக்கு எதி​ராக அந்த தன்​னார்​வலர் இங்கு நின்று கொண்​டுள்​ளார். போதைக்கு எதி​ராக வலு​வாக உள்​ளோம்.

19 லட்சம் உறுப்பினர்கள்

38 நாளில் 19 லட்​சம் பேர் உறுப்​பின​ராக சேர்ந்​துள்​ளனர். தமிழகத்​தில் நல்​ல​வர்​கள் இருக்​கிறார்​கள், வாய்ப்​புக்​காக காத்​திருக்​கிறார்​கள். இந்த இயக்​கம் எனது குடும்​பத்​திற்கு சொந்​த​மானது கிடை​யாது, உங்​களுக்​கானது.

நல்ல சமூகத்தை உருவாக்குவோம்

இந்த அமைப்பை பொறுத்​தவரை நானும் ஒரு தன்​னார்​வலர் தான். இந்த இயக்​கத்​தின் உறுப்​பினர்​கள் 50 லட்​சத்தை எட்​டும் போது நிரந்​தர​மாக ஒரு நல்ல சமூகம் உரு​வாகும். சுற்​றுச்​சூழலை பாது​காக்க 50 லட்​சம் மரக்​கன்​றுகளை நட உள்​ளோம்.

ஆறு முக்கிய பிரச்னைகள்

ஆறு மாதம் இலக்கு வைத்​துள்​ளோம். செப்​டம்​பர் மாதம் பெண்​கள் பாது​காப்பு குறித்​தும், அக்​டோபர் மாதம் குழந்​தைகள் நலன் என ஆறு மாதங்​களில் ஆறு முக்​கிய பிரச்​னை​களை எடுத்து தீர்வு காண உள்​ளோம்​. ‘வீ த லீடர்’ அமைப்​பில் 17 சதவீதம் மகளிர் இருக்​கிறார்​கள்.

2031ல் ஆட்சி மாற்றம்

இன்​னும் அதி​க​மாக வேண்​டும். 2031 ல் ஆட்சி மாற்​றம் ஏற்​படும், ஆறு மாதங்​கள் முழு​மை​யாக சமூக பணி செய்​வோம். மக்​கள் நம்​மிடம் வரு​வார்​கள்.

ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை மாதம் போதைக்கு எதி​ரான மாத​மாக கடைபிடிப்​போம்,

இடையூறு ஏற்படுத்த மாட்டோம்

புதி​தாக ஆட்​சிக்கு வந்​தவர்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​து​வது நமது நோக்​கம் அல்ல, அதற்​கான மாநாடு இது அல்ல. குடும்​பத்​தில் ஏற்​படும் வன்​முறை, சாலை விபத்து என எல்லா இடத்​தி​லும் பிரச்​சனை​களுக்கு காரண​மாக மது இருக்​கிறது.

அரசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

2026 ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 லட்​சம் வாக்​காளர்​கள் வாக்​களித்து ஒரு அரசை தேர்ந்​தெடுத்​துள்​ளார்​கள். அந்த அரசுக்கு மரி​யாதை கொடுக்க வேண்​டும்.

கைதூக்கி தூக்கி விடுவோம்

புதிய அரசில் உள்ள அமைச்​சர்​கள் பெரும்​பாலானோர் முதல் முறை​யாக அமைச்​ச​ரானவர்​கள். அதனால் தடு​மாற்​றம் இருக்​கத்​தான் செய்​யும், தடு​மாறும் போது தூக்கி விட வேண்​டும் கீழே அழுத்​தக்​கூ​டாது.

போதை ஒழிப்பு குறித்து ஒரு ஆண்​டுக்​கான வெள்ளை அறிக்கை கொடுத்​துள்​ளோம்​.​ ஒரு ஆண்டு பொறுத்திருந்து பார்ப்போம். என்ன செய்கிறார்கள் என்று.

நான் ”இந்தியன், இந்து”

நான் இறு​மாப்​புடன் சொல்​வேன் தேசி​ய​வாதி என்​று ஜாதி மதத்தை வீட்​டில் வைத்து பூட்டி விட்டு தான் வந்​துள்​ளேன். கரூர் இனாம் நிலம் விஷ​யத்​தில் தவெக வுக்கு ஆதர​வாக உள்​ளேன் என சொல்​கிறார்​கள். என்னை இந்து விரோதி என்​கிறார்​கள்.

”இனாம் நிலம்” - விளக்கம்

இதே இனாம் நிலத்தை அதில் இருப்​பவர்​களுக்கு வழங்க வேண்​டும் என ஹெச்.ராஜா பேசி​னார், பழனிசாமி பேசி​னார். அவர்​கள் இந்து விரோ​தி​கள் இல்​லை, ஆனால் என்னை இந்து விரோதி என்​கிறார்​கள்.

மதம் ஜாதி அடை​யாளத்தை வீட்​டுக்​குள் பூட்டி வைத்து விட்டு தான் வெளியே வந்​துள்​ளேன். தமிழகத்தை முதன்மை மாநில​மாக மாற்ற வேண்​டும் என்​பது இலக்கு. அதை நோக்​கித்​தான் உழைப்பு இருக்​கும்.

அரசியல் கட்சியாக...

‘வீ த லீடர்ஸ்’ அரசி​யல் கட்​சி​யாக மாறப்​போகிறது அதற்​கான சரி​யான நேரம், தலை​மை, எண்​ணிக்கை வரும். கிராமந்​தோறும் சென்று மக்​களை சந்​திக்க வேண்​டும்.

தவெக அரசும் கடன் வாங்கும்

தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு தனி நபர் மீதும் 4 லட்​சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்​ளது. தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்​கும், அடுத்த ஆண்​டும் அதே​போல் கடன் வாங்​கும்.

நாம் ஆட்​சிக்கு வரும் போது அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் உலகத்​தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்​கப்​படும்.

2031ல் ஆட்சியை பிடிப்போம்

உண்​மை​யான சமூக நீதி, நிலை​யான வளர்ச்​சி, விவ​சா​யத்​தில் எழுச்​சி, பண்​பாட்டு மீட்​சி, அரசி​யல் புரட்சி நமது இலக்​காக இருக்​கும்​.தமிழகத்​தில்​ 2031-ல்​ ஆட்​சி​யை பிடிப்​போம்” என்று அண்ணாமலை உரைநிகழ்த்தினார்.

‘வீ த லீடர்ஸ்’ மாநாட்​டில் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்​.

மாநாட்டு தீர்மானங்கள்

* போதைக்கு எதி​ரான விழிப்​புணர்வு ஏற்​படுத்த ஆண்​டு​தோறும் ஜூலை மாதம் வெள்ளை பட்டை மாத​மாக கடைபிடிக்​கப்​படும்.

* கல்வி நிறு​வனங்​களில் போதைப்​பொருள் எதிர்ப்பு குழுக்​களை உரு​வாக்க வேண்​டும்.

* வேலைக்கு செல்​லும் தொழிலா​ளர்​கள், இளைஞர்​கள் காலை நேரத்​தில் மது​பானம் அருந்​து​வதை தடுக்க கள்​ளச்​சந்தை மது விற்​பனை, கஞ்சா ஆகிய​வற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

* அரசு அனு​மதி பெற்ற எப்​எல் 2 மது​பான கூடங்​களில் விதி​மீறலில் ஈடு​படு​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

’ புதிய எப்​எல் 2 மது​பான கூடத்​துக்கு அனு​மதி வழங்​ககூ​டாது. போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்தை வலுப்​படுத்த வேண்​டும்

உள்​ளிட்ட தீர்​மானங்​கள் மாநாட்டில் நிறைவேற்​றப்​பட்​டன.

======================