Annamalai condemned DMK government for favoring Karnataka over the Mekedatu Dam issue,  google
தமிழ்நாடு

மேகதாது அணை : காங்கிரசுக்காக தமிழக மக்களின் நலனை அடமானம் வைக்கும் திமுக : அண்ணாமலை காட்டமான விமர்சனம் !

Annamalai slams DMK on Mekedatu Dam issue in Tamil : மேகதாது அணை விவகாரத்தில், திமுக அரசு தமிழகத்தின் உரிமையை காக்காமல், கர்நாடகாவுக்கு சாதகமாக நடப்பதாக அண்ணாமலை கண்டித்துள்ளார்.

Kannan

மேகதாது அணை - கர்நாடகம்

Annamalai slams DMK on Mekedatu Dam issue in Tamil : கர்நாடக சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கை மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார. இது, தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அணை கட்ட கர்நாடாக முயற்சி

இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது.

மக்கள் நலன் அடமானம் வைப்பு

காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதி செய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கி இருக்கிறது.

கர்நாடகத்திற்கு சாதகமாக திமுக

தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது.

மக்களுக்கு துரோகம் செய்வதா?

தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் இது. உடனடியாக, தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சருடன் பேசி, மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று அந்தப் பதிவில் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக அரசு தீவிர முயற்சி

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகரம் மாவட்டத்தில்அர்க்காவதி ஆறு கலக்கும் இடத்திற்கு அருகில் மேகதாதுவில் (ஆடு தாண்டும் இடம்) கட்டத் திட்டமிட்டுள்ள பன்நோக்கு அணைத் திட்டம் இது.

பெங்களூரு குடிநீர் தேவை

சுமார் ₹9,000 கோடி மதிப்பீட்டில் 67.16 TMC கொள்ளளவுடன், 400 MW மின் உற்பத்தி மற்றும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக இந்த 99 மீட்டர் உயர அணை திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்கு காவிரி மூலம் கிடைக்கும் தண்ணீர் பெருமளவில் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

====