தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்குகிறார். இவரது வருகை திமுக கூட்டணியில் குழுப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், விஜய் மீது பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆளும் திமுக அரசு சரியான பாதுகாப்பை வழங்க தவறி விட்டதாகவே அனைவரும் கூறுகின்றனர்.
வழக்கறிஞரை தாக்கிய விசிக
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு வழக்கறிஞரை தாக்குகின்றனர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., ஒரு கட்சித் தலைவர். எனவே, இந்த தாக்குதல் குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
விஜய் வருகையால் திருமா குழப்பம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்புதான் திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் பிரச்சினை உண்டாகி இருக்கிறது. அவர் குழம்பி போய் இருக்கிறார். வக்கீலை தாக்கியது குறித்து பதிவிட்டதற்காக என் மீது திருமாவளவன் குற்றம் சாட்டுகிறார். எத்தனை காலத்திற்கு வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்வார். விசாரணை நடத்தினால் யார் மீது தவறு இருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
நாடகம் ஆடும் தமிழக அரசு
காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் மருந்து தயாரித்ததில் ம.பி., யில் 23 குழந்தைகள், ராஜஸ்தானில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழக அரசு மருந்து ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல, மாய தோற்றத்தை உருவாக்கி பிரச்சினையை திசை திருப்ப பார்க்கின்றனர்” இவ்வாறு அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
============