Annamalai cross-examined TR Balu in the defamation case filed against him Source : Google
தமிழ்நாடு

”10 கப்பல் இல்லை, இரண்டு தான்” : அண்ணாமலை விசாரணை, TR பாலு பதில்

Annamalai Question TR Baalu on Defamation Case in Tamil : தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் டி.ஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார்.

Kannan

'DMK ஃபைல்ஸ்'

Annamalai Question TR Baalu on Defamation Case in Tamil : பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட 'DMK ஃபைல்ஸ்' இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

அதில், திமுக பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

அதில், டிஆர் பாலு மத்திய அமைச்சராக இருந்த போது 10 கப்பல்களை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அண்ணாமலை மீது டிஆர் பாலு வழக்கு

இந்தக் குற்றச்சாட்டு தனக்கு எதிராக பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

குறுக்கு விசாரணை செய்த அண்ணாமலை

வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜரான அண்ணாமல், டிஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய தொடர்ந்து கோரி வந்தார். இந்தநிலையில், இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. டி.ஆர்.பாலு, அண்ணாமலை ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

10 கப்பல்கள் - மு.க. அழகிரி தகவல்

அப்போது, தனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அண்ணாமலை தரப்பு நடத்திய குறுக்கு விசாரணணை கேள்விகளுக்கு டிஆர் பாலு பதில் அளித்தார்.

அப்போது, சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சுய லாபம் அடைவதற்காகவும் டி.ஆர் பாலு அமைச்சராக இருந்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 10 மீன் பிடி கப்பல்களை வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குற்றஞ்சாட்டியதாக அண்ணாமலை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

2 கப்பல்கள் தான் வாங்கப்பட்டது - டிஆர் பாலு

இதனை மறுத்த டி.ஆர்.பாலு தரப்பு வழக்கறிஞர், செய்தியை உள் நோக்கத்துடன் திரித்து வெளியிடுவதாக விளக்கமளித்தார். தான் அமைச்சராக இருந்த போது 10 கப்பல்கள் வாங்கவில்லை, 2 கப்பல்கள் தான் வாங்கப்பட்டது என்றார்.

சேது சமுத்திர திட்டம் என்பது காமராஜரின் கனவு திட்டம் என்றும் இதுபற்றி மு.க.அழகிரிக்கோ, அண்ணாமலைக்கோ தெரியாது என்றும் வாதிடப்பட்டது.

டிஆர் பாலு மீது அண்ணாமலை அவதூறு வழக்கு

முறைகேடாக இடங்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்த நிலையில் இதனை விசாரித்து கட்சி மேலிடம் பதவியை பறித்து விட்டதாக தனக்கு எதிராக டி.ஆர். பாலு விமர்சித்துப் பேசியதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வதாக அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

====