Annamalai hit backallegations that he supports Vijay, Rahul,CJP, opposing the BJP and Modi source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”ராகுல், விஜய், கரப்பான்கள்” மீது திடீர் பாய்ச்சல் : மோடிக்கு கண்டனம், BJP-க்கு பதிலடி : களமாடும் அண்ணாமலை..!

விஜய், ராகுல், சிஜேபியை ஆதரிக்காரு, பாஜக, மோடிய எதிர்க்கிறாரு என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து இருக்காரு அண்ணாமலை.

Kannan

ஐபிஎஸ் அதிகாரி to அரசியல்

அண்ணாமலை, ஐபிஎஸ் அதிகாரியா கர்நாடகாவில் தொடங்கிய அவரது பயணம், இன்னிக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பு, எதிர்காலத்தில் வலுவான அரசியல் என வந்து நிக்குது. போலீஸ் ஆபிசர் பதவிய உதறிட்டு வந்த அவரை அரவணைத்த பாஜக, தமிழக தலைவரா உக்கார வச்சது.

பாஜக தலைவராக அண்ணாமலை

போராட்டங்கள், திமுக எதிர்ப்பு என தனது வலுவான பேச்சால, இளைஞர்கள ஈர்க்கிற சக்தியா மாறினாரு அண்ணாமலை. ஆனா, அதிமுகவோட ஏற்பட்ட மோதல், அவரது பதவிக்கு ஆபத்தா முடிஞ்சது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல்ல கட்சி படுதோல்வி அடைஞ்ச பிறகு, அங்கிருந்து விலகினாரு.

வீ த லீடர்ஸ் அமைப்பு தொடக்கம்

வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை அண்ணாமலை தொடங்க அதில லட்சக் கணக்கானோர் இணைஞ்சி வர்றாங்க. நீர் நிலைகள தூர் வாருவதில் தொடங்கி, மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியா குரல் கொடுத்து வர்றாரு அண்ணாமலை.

மோடிக்கு எதிர்ப்பு, கரப்பான்களுக்கு ஆதரவு

சில தினங்களா அவரோட அரசியல் நகர்வுகள் எதிர்க்கட்சியினரை ஆச்சரியப்பட வைக்குது. பாஜகவினரை கொந்தளிக்க செய்து இருக்கு. விஜயதசமி அன்னிக்கு டெல்லியில கரப்பான் பூச்சி சின்னத்தை கொளுத்தியதை வன்மையா கண்டிச்சாரு அண்ணாமலை.

சிஜேபி கட்சிக்கு பாஜக விளம்பரம் தேடி கொடுக்கிறதா சொன்ன அவரு, டெல்லி போராட்டங்களில் மத்திய அரசு அதாவது பிரதமர் மோடி மீதே தனது விமர்சனத்தை முன்வச்சாரு. கரப்பான்களுக்கு போராடுற உரிமை இருக்கு, அதை எப்படி அரசு தடுக்கலாம்ன்னு ஆதரவா பேசினாரு.

முதல்வர் விஜய் மீது விமர்சனம் இல்லை

முதல்வர் விஜய் மீது விமர்சனங்களை வைக்காமல் ஒதுங்கும் அண்ணாமலை, ராகுல் காந்தியின் தாய்லாந்து விசிட்டை பாஜக சாட்டையடி போல தாக்க, அது அவரோட தனிப்பட்ட பயணம் அப்படின்னு சொல்லி அதிர வச்சாரு.

கொந்தளித்த பாஜக

வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கிறாரு அண்ணாமலை, தங்களுக்கு எதிராக அவர் திரும்பிட்டதாவே கொந்தளிக்கிறாங்க பாஜகவினர்.

கார்ப்பரேட் ஸ்டைலில் வீ த லீடர்ஸ் அமைப்பு மூலமா, அரசியலில் தனியாக களம் கண்டுள்ள அண்ணாமலை, கட்சியை தொடங்கா விட்டாலும், எதிர்காலத்தில் எப்படி செயல்படணும் அப்படின்னு, நிர்வாகிகளுக்கு பாடம் எடுத்து வர்றாரு.

தமிழக அரசியலில் அண்ணாமலை தீவிரம்

ஒருபக்கம் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, மற்றொரு புறம் பாஜக எதிர்ப்பு, இளைஞர்களை கவர சிஜேபிக்கு ஆதரவு, விஜய், ராகுல் பக்கமும் சாப்ட் கார்னர் என, தமிழக அரசியலில் புதிய ஆட்டத்தை தொடங்கி இருக்காரு அண்ணாமலை.

மகளிருக்கு அரசியல் உரிமை

கிருஷ்ணகிரியில நடந்த தன்னோட அமைப்பின் மகளிர் வளர்ச்சி மாநாட்டில பேசிய அவரு, தேர்தலில் ஓட்டு போடுறதுல பெண்கள் சதவீதம் 51 ஆக இருக்கு, ஆண்கள் விழுக்காடு 49-தான். ஆனா, அரசியலில் பெண்கள் பங்கு வெறும் 10 சதவீதத்துக்குளே தான் இருக்கு. அவங்களுக்கு முழுமையான அரசியல் உரிமை கொடுக்கணும் அப்படின்னு முழங்கினாரு அண்ணாமலை.

விஜய் தப்பு செஞ்சா கண்டிப்பேன்

விஜய்யை எனக்கு தெரியாது, அவரோட பழகியது கூட கிடையாது, திமுக ஆட்சியில அவருக்கு நெருக்கடி ஏற்பட்ட போது குரல் கொடுத்தேன். இப்போ தவெக ஆட்சியில தவறு செய்தால் கண்டிக்கிறேன் அப்படின்னு விளக்கம் கொடுத்து இருக்காரு.

கரப்பான் பூச்சி கட்சியை ஆதரிக்க மாட்டேன்

கரப்பான் பூச்சி கட்சியின் கொள்கை வேறு, எங்கள் நோக்கம் வேறு, போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்று தான் நான் சொல்லி இருக்கிறேன்.

மோடி அரசுக்கு ஆதரவு, எதிர்ப்பு

பிரதமர் மோடியை நான் எதிர்க்கல, அரசு சிறப்பா செயல்படும் போது பாராட்டுகிறேன். ஆட்சியில தவறு இருந்தால் சுட்டிக் காட்டுகிறேன். இதற்காக பாஜகவினர் கொந்தளிக்க வேண்டிய அவசியம் இல்லைன்னும் பதிலடி கொடுத்தாரு அண்ணாமலை.

8 லட்சம் பதவிகள் இலக்கு

வீ த லீடர்ஸ் அமைப்பு ஆலமரமா வளரும், 21 லட்சம் உறுப்பினர்களும் வெறும் லைக் போடுறவங்களா இருக்க கூடாது, ஆட்சிய பிடிக்கணும்ங்கற நோக்கம் இருக்கணும். இவங்கள்ல்ல 8 லட்சம் உள்ளாட்சி முதல் பார்லிமெண்ட் வரை பதவிகளை கைப்பற்றணும் அப்படின்னு பேசியிருக்காரு.

எனக்கு யாரும் தேசியம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று பாஜகவை சாடிய அண்ணாமலை, 35 சதவீத வாக்குகளை பெறுவதே வீ த லீடர்ஸ் அமைப்பின் இலக்கு அப்படின்னு அடிச்சு சொல்லி, தனது அரசியல் முன்னெடுத்து செல்கிறாரு அண்ணாமலை

=======