தமிழக பாஜக
Annamalai about TN Election 2026 : சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கட்சியின் இப்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர்கள் எல். முருகன், தமிழிசை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து
சமூக வலைதளப் பக்கத்தில் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, " தி.மு.க அரசின் ஊழல் மற்றும் துரோகத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் மக்கள் பாஜக வேட்பாளர்களுக்குப் பெருவாரியான ஆதரவை வழங்கி, மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்," எனப் பதிவிட்டிருந்தார்.
தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை
அண்ணாமலையும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதுபற்றி சர்ச்சைகள் வெளியான நிலையில், அவர் வேண்டுமேன்றே புறக்கணிக்கப்படதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
பிரசாரம் செய்வதே இலக்கு
ஆனால், இந்த ஹேஷ்யங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடாததற்குப் பின்னால் எந்த ரகசியமும் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே கட்சித் தலைமை எனக்கு இட்ட கட்டளை.
கட்சி தலைமையிடம் விளக்கம்
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை கட்சி தலைமையிடம் நீண்ட நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்டேன். கோர் கமிட்டியிடமும் விளக்கமாக தெரிவித்து விட்டு, பியூஷ் கோயலிடமும் ஒரு வாரம் முன்பு இதுபற்றி விளக்கி இருந்தேன்.
தமிழகம் முழுவதும் பிரசாரம்
இதை ஏற்றுக் கொண்ட கட்சி மேலிடம், எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்கவில்லை. எனது கருத்துக்கு மதிப்பளித்து, மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி அளித்து இருக்கிறது.
பாஜக வேட்பாளர்கள் 27 பேர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறேன்.
தமிழகத்தில் காட்சிகள் மாறும்
காலம் இருக்கிறது. தமிழகத்தில் காட்சிகள் மாறும். எதிர்காலத்தில் நிறைய தேர்தல்கள் வரப்போகிறது. அப்போது போட்டி போட்டுக் கொள்ளலாம்.
நம்மீது அன்பாக இருக்கும் தமிழக மக்கள், நம்மை ஆதரிக்க தயங்க மாட்டார்கள்” என்று அண்ணாமலை பேட்டியளித்தார்.
=====