மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
Annamalai on Paddy Storage Warehouse : தமிழகத்தில் நெல் கொள்முதலில் திமுக அரசு அலட்சியம் காட்டியதால், கொள்முதல் கிடங்குகளில் காத்துக் கிடந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்நு வீணாகின. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், மழுப்பலான பதிலை மட்டுமே திமுக அரசு தந்து வருகிறது.
விவசாயிகளை வஞ்சித்த திமுக அரசு
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நெல் கிடங்குகள் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “ நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு, தாமதம் ஏற்படுத்தப்படுகிறது.
முதல்வர் கடித நாடகம
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட துவங்கிய நிலையில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக, ஏமாற்று வேலை நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ரூ.309 கோடி எங்கே?
கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிட்டதாக, தி.மு.க., அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது, 309 கோடி ரூபாய் நிதி?
விவசாயிகளுக்கு துன்பம்
திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும் தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் தானே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை சாடியுள்ளார்.
===============