Annamalai requests that his name and photo not be used unnecessarily  google
தமிழ்நாடு

தனது ”பெயரை, புகைப்படத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம்” : அண்ணாமலை வேண்டுக்கோள்

நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Rohini

அண்ணாமலை வேண்டுக்கோள்

சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது, அதனை இனி பயன்படுத்த வேண்டாம் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது

இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும்,

அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.

ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

http://wetheleader.org என்ற இணையதளம் மூலம் இயக்கத்தில் சேரலாம்

எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்