Former Tamil Nadu BJP leader Annamalai said that spiritual rule will soon flourish in Tamil Nadu  https://x.com/annamalai_k
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சிதான் மலரும் : அடித்துச் சொல்லும் அண்ணாமலை

தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும் என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Kannan

ஆதீனங்களுக்கு பாராட்டு :

கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, விழா மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களையும் எடுத்து செல்லக்கூடிய துணிவு ஆதினங்களுக்கு உள்ளது என்றார்.

குருபவுர்ணமியின் மகத்துவம் :

குரு பவுர்ணமி அன்று வட இந்தியாவில், இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எனவே, இந்நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது, இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மிகத்தை விரிவாக பார்க்கக்கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.

மிகக் குறைவாக மூச்சு விடும் ஆமைக்கு ஆயுள் அதிகம், இந்த ரகசியத்தை உணர்ந்து செயல்படுவோருக்கு ஆயுள் அதிகம்.

எங்கெல்லாம் நம்முடைய பெரியவர்கள் இருக்கின்றார்களோ, அங்கே முறையான பூஜைகள், வழிபாடுகள் செய்ய வேண்டும். ராஜாவாக இருந்தாலும், சன்னியாசிக்கு முன் தரையில்தான் அமர வேண்டும்.

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி :

இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன், என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்றுதான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்துவிட்டது எனலாம். தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிக்க உள்ளேன், இவ்வாறு, அவர் கூறினார்.

-----