Annamalai said that the people's mindset is to not want family rule 
தமிழ்நாடு

”குடும்ப ஆட்சி வேண்டாம்” இதுவே மக்களின் மனநிலை : அண்ணாமலை கணிப்பு

குடும்ப ஆட்சி வேண்டாம் என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Kannan

Annamalai said that the people's mindset is to not want family rule சிவகங்கை மாவட்டம் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ பிகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கும்” என்றார்.

பிகாரில் மக்களுக்கான ஆட்சி

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை விரைவில் வழங்கவுள்ளனர். தேர்தல் முடிந்து விட்டது. தேர்தலுக்காக என்னவெல்லாம் சொன்னார்களோ, அதை நிதிஷ் குமார் வரிசையாக செய்து முடிப்பார்.

காங்கிரசை மக்கள் நம்பவில்லை

அதே போல் காங்கிரசும் நாங்கள் வெற்றி பெற்றால் 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கொடுப்போம் என்கின்றனர். ஆனால், பீஹார் மக்கள் காங்கிரசை நம்பவில்லை. 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து, மறுபடியும் ஆட்சி பொறுப்பை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரசுக்கு தோல்வி தான்

பிகாரில் எப்படி காங்கிரசுக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக தந்தார்களோ, அதேபொன்றதொரு நிலை தமிழகத்திலும் காங்கிரசுக்கு வரும். இந்த உண்மை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரிந்து விட்டது. அதனால் தான், பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்யை தவறாக பேசுகிறார்.

குடும்ப ஆட்சி - மக்கள் வெறுப்பு

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் இருக்கும் மக்களிடம் இருக்கிறது. அது பிகாரிலும் இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் தேர்தல் முடிவுகள் அமைந்தன. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.

பாஜகவின் கூட்டணி தர்மம்

பிகாரில் 2020ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பாஜகவை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை பெற்று இருந்தது. ஆனாலும், நிதிஷ் குமார் முதல்வர் ஆக்கப்பட்டார். இப்போதும், அவரே முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கூட்டணி தர்மம் தான்.

காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் அப்படி நடந்து கொண்டதில்லை. எனவே, அந்தக் கட்சி ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது” இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.

============