Annamalai strongly condemned DMK government's obstruction of lighting lamp at Thiruparankundram Hill Karthigai Deepam 2025 Google
தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எதிர்ப்பா? : அரசுக்கு எச்சரிக்கை

Annamalai on Thiruparankundram Karthigai Deepam 2025 : திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற திமுக அரசு முட்டுக்கட்டை போடுவதற்கு, அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி

Annamalai on Thiruparankundram Karthigai Deepam 2025 : திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்து, அனுமதி வழங்கி இருக்கிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, பொதுமக்கள், முருக பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.

திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது?

ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?

இந்துகளுக்கு எதிராக திமுக அரசு

இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

========