Annamalai urged immediate closure of 129 TASMAC shops located near schools, colleges, places of worship  AI generated
தமிழ்நாடு

”129 டாஸ்மாக் கடைகள்” : பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகே, உடனே மூடுங்க! : புள்ளி விவரங்களோடு அடித்த அண்ணாமலை...!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருக்கும் 129 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Kannan

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

Annamalai has urged the immediate closure of 129 TASMAC shops located near schools, colleges, places of worship, and bus terminals in Tamil Nadu.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

129 டாஸ்மாக் கடைகள்

இந்தநிலையில், 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்குற் அறிக்கையில், தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் 129 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

'வி தி லீடர்ஸ்' களஆய்வு

“ தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு, 'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

டாஸ்மாக் விற்பனை கடைகள்

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே சுமார் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு

எனவே, நமது குழந்தைகள் கல்வி பயிலும் இடங்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்யும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்கள் பயணம் செய்யும் பேருந்து நிலையப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு...

கடைகளை உடனே மூட வேண்டும்

இந்த 129 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்” என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுளார்.

எந்தெந்த இடங்களில் இந்தக் கடைகள் அமைந்துள்ளன போன்ற விவரங்களையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிராக ஜூலை மாதம் பொள்ளாச்சியில் மாநாட்டை நடத்தினார் அண்ணாமலை.

========================