Annual examinations for students of classes 1 to 9 in Tamil Nadu conducted from April 1 to 16 google
தமிழ்நாடு

1 to 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு அட்டவணை : ஏப்.1 முதல் 16 வரை தேர்வுகள், 17 முதல் கோடை விடுமுறை,முழு விவரம்!

தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 16ம் தேதி வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

புதிய தேர்வு அட்டவணை

தேர்தலுக்கு பள்ளிகளும், தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களும் தேவை என்பதால், முன்கூட்டியே தேர்வுகளை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு புதிய தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

ஏப். 1 முதல் 16 வரை ஆண்டுத் தேர்வு

அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

1 முதல் 5 வகுப்பு - தேர்வு அட்டவணை

* 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி (திங்கள் கிழமை) 4 மற்றும் 5 வகுப்புக்கு தமிழ்

* 07ம் தேதி (செவ்வாய் கிழமை) 4 மற்றும் 5 வகுப்புக்கு விருப்பமொழிப் பாடம்

* 08ம் தேதி (புதன் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு தமிழ், 4 மற்றும் 5 வகுப்புக்கு ஆங்கிலம்

* 09ம் தேதி (வியாழக்கிழமை) 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு விருப்பமொழிப் பாடம், 4 மற்றும் 5 வகுப்புக்கு கணிதம்

* 13ம் தேதி (திங்கள் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு ஆங்கிலம், 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு அறிவியல்

* 16ம் தேதி (வியாழக் கிழமை) 1 முதல் 3ம் வகுப்புக்கு கணிதம், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

*1ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை

* 2ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை

* 3ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12 மணி வரை

* 4ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை

* 5ம் வகுப்புக்கு காலை 10 10 மணி முதல் 12 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.

6 முதல் 9ம் வகுப்பு -தேர்வு அட்டவணை

* ஏப்ரல் 1ம் தேதி (புதன் கிழமை) தமிழ், 06ம் தேதி (திங்கள் கிழமை) விருப்ப மொழி

* 07ம் தேதி (செவ்வாய் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு ஆங்கிலம், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு கணிதம்

* 08ம் தேதி (புதன் கிழமை) உடற்கல்வி

* 09ம் தேதி (வியாழக் கிழமை) 6 மற்றும் 8-ம் வகுப்புக்கு கணிதம், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு ஆங்கிலம்

* 13ம் தேதி (திங்கள் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு அறிவியல், 7 முதல் 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல்

* 16ம் தேதி (வியாழக் கிழமை) 6 மற்றும் 8ம் வகுப்புக்கு சமூக அறிவியல், 7 மற்றும் 9ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

17ம் தேதி முதல் கோடை விடுமுறை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். 2026 –2027ம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ம் தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=============