Applications for Group 1 exam open from July 30: TNPSC announcement  google
தமிழ்நாடு

குரூப் 1 தேர்விற்கு ஜூலை 30 முதல் விண்ணப்பிக்கலாம் : செப்டம்பர் 6ல் தேர்வு : TNPSC அறிவிப்பு....!

தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Rohini

இது குறித்து TNPSC செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதுப்படி

குரூப்-1 நிலையிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டப் பதிவாளர்கள் 1 தொழிலாளர் துறை உதவி ஆணையர் பணியிடம், 12 துணை ஆட்சியர்,

2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கு ஜூன் 30-இல் இருந்து ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 6-ஆம் தேதி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற இருக்கிறது , அதற்கு ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது

தேர்வு முறை குறித்த விவரங்கள்

இந்த குரூப் 1 தேர்வானது கீழ்கண்ட படிநிலைகளில் தேர்வானது நடைப்பெறும்

முதல்நிலைத் தேர்வு (Prelims): 300 மதிப்பெண்களுக்குக் கொள்குறி வகை (Objective type) தேர்வு. இது முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற மட்டுமே பொதுவான தேர்வு முறையாக அணுகப்படுகிறது

இரண்டாவதாக முதன்மைத் தேர்வு (Mains): விரிவாக எழுதும் முறை (Descriptive type). இதில் பொது அறிவு மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற கேள்விகள் இடம்பெறும்

இறுதியாகவே இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் ,அதாவது 100 மதிப்பெண்கள். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தேர்விற்கான தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருத்தல் மற்றும் ,தமிழிலை புரிந்துக்கொள்ளும் படி இருத்தல் வேண்டும்

குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 32 வரை இருக்கும் பட்சத்தில் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெர்விகப்பட்டுள்ளது

=============================