"Approaching the Supreme Court is the only way regarding the Cauvery issue": Minister Nirmal Kumar! google
தமிழ்நாடு

"காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே தமிழகத்திற்கு உள்ள ஒரே வழி” : அமைச்சர் நிர்மல்குமார் !

தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்கக் கூடாது என்பதே கடந்த 70 ஆண்டுகளாக அவர்களின் கொள்கையாக உள்ளது என்றார்.

Kavitha prasanna

"Approaching the Supreme Court is the only way regarding the Cauvery issue": Minister Nirmal Kumar!

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதில் கர்நாடகா உறுதியாக இருப்பதால், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே தமிழகத்திற்கு உள்ள ஒரே வழி என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மின் கட்டணப் புகார் மற்றும் காவிரி விவகாரம் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

"மின் கட்டண புகார் தவறான தகவல்"

மின் கட்டண உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில்

மின் கட்டண உயர்வு தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்ததாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தவறான தகவலைக் கூறியுள்ளார். அதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மின்சாரத் துறை ஆய்வு

கோடைகாலம் முடிந்த நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பராக அரசே முன்வந்து 3.70 லட்சம் வீடுகளில் மறுஆய்வு செய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் 10,000 வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், வெறும் 50 இணைப்புகளில் மட்டுமே முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வாட்ஸ்-அப் தகவல்களை வைத்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கக் கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்

திமுக ஆட்சிக் காலத்தில் காவிரி விவகாரத்தில் பலமான பிடி இருந்தபோதிலும், 1974-ல் மைசூரு உடனான 50 ஆண்டுகால ஒப்பந்தத்தைத் தவறவிட்டுப் பெரும் தவறு செய்துவிட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்து வருகிறது.

கர்நாடகாவின் நிலைப்பாடு

கர்நாடகாவில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ எது ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்கக் கூடாது என்பதே கடந்த 70 ஆண்டுகளாக அவர்களின் கொள்கையாக உள்ளது என்றார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள்

காவிரியில் தண்ணீர் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தவிர்த்து, பிற சட்ட ரீதியான வாய்ப்புகளையும் முதல்வர் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தேவையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்றார்.

ஒன்றிய அரசுக்கு அழுத்தம்

மேலும், ஒன்றிய அமைச்சர் ஒருவர் கர்நாடகாவுக்கு ஆதரவாகப் பேசுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற இரு மாநிலப் பிரச்சனைகளில் ஒன்றிய அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

=====