As the Tamil Nadu cabinet was expanded, 23 people took oath as ministers google
தமிழ்நாடு

அமைச்சரவை விரிவாக்கம் : 23 பேர் அமைச்சர்களாகினர்! : 33 பேருடன் முதல்வர் விஜய் கேபினட்...

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Kannan

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வர் விஜய், அமைச்சர்கள் பதவியேற்பு

அதைத் தொடர்ந்து, கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்

இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. அதன்படி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்கள் 23 பேர்

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

புதிய அமைச்சர்களின் விவரம் :

* சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பார்த்திபன்.

* கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ விக்னேஷ்

* கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார்

* அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ முகமது பர்வேஸ்

* கடலூர் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார்

* ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன்

* ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய் பாலாஜி.

* ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ்.

* கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ வினோத் ரவி.

* இராசிபுரம் தொகுதி எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

* தாம்பரம் தொகுதி எம்எல்ஏ கில்லி சரத்.

* திருவாடணை தொகுதி எம்எல்ஏ ராஜீவ்.

* காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ரஞ்சித்குமார்.

* வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ குமார்.

* தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

* அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி.

* குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏ விஜயலட்சுமி.

* அரக்கோணம் - காந்திராஜ்.

* ஓட்டப்பிடாரம் - மதன்ராஜா.

* ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி.

* கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ - ராஜேஷ் குமார்.

* மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன்.

* ஸ்ரீபெரும்புத்தூர் எம்எல்ஏ தென்னரசு.

======