Sivagangai SP Ashish Rawat  Sivagangai SP Ashish Rawat
தமிழ்நாடு

லாக்அப் மரணம் : காத்திருப்போர் பட்டியலில் சிவகங்கை எஸ்பி.

Sivagangai Lockup Death: திருப்புவனத்தில் விசாரணை கைதி அஜித்குமார் மரண விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட எஸ்பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

Kannan

Sivagangai Lockup Death: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மக்களின் கடும் கோபத்தை தணிக்கும் வகையில் அரசு சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===