Asian Games Medalist Vidhya Ramraj Honoured with Car Along with Coach Nehpal Singh Google
தமிழ்நாடு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜ்.. பயிற்சியாளருக்கும் கார் பரிசு வழங்கி கவுரவம்!

வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பாராட்டு விழா.. சாரட் வண்டியில் அழைத்து வந்து மாணவர்கள் உற்சாக வரவேற்பு...

NARENDRAN K

கார் பரிசு வழங்கி கவுரவம் :

ஆவடி வேலம்மாள் வித்யாலயா வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் தலைமை தாங்கினார்.

அப்போது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு 3 பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இருவருக்கும் வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இளம் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் சாதனை:

விழாவில் பேசிய தாளாளர் வேல்மோகன், சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது பயிற்சியாளரின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விளையாட்டுத் திறமை ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு வித்யா ராம்ராஜின் வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

அவரது சாதனை, விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.

சாரட் வண்டியில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு:

விழாவுக்கு முன்னதாக, வித்யா ராம்ராஜ், அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அப்போது மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கல்வியுடன் விளையாட்டுத் திறமைகளையும் ஊக்குவித்து வரும் வேலம்மாள் நெக்ஸஸ், மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பயிற்சி வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனை :

விழாவில் பேசிய தாளாளர் வேல்மோகன், வித்யா ராம்ராஜின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறமை இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டால் சர்வதேச அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு வித்யா ராம்ராஜின் வெற்றி எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

=====================