Assembly by-elections in Maduranthakam,Dharapuram constituencies concluded peacefully.  source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”மதுராந்தகம் 86.26%, தாராபுரம் 80.30%”: இடைத்தேர்தல் வாக்கு சதவீதம் பொதுத்தேர்தலை விட குறைவு : எகிறும் எதிர்பார்ப்பு..!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அமைதியாக நடந்து முடிந்தது.

Kannan

Polling for the Assembly by-elections in the Maduranthakam and Dharapuram constituencies concluded peacefully

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

தமிழகத்​தில் ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில், மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் போட்​டி​யிட்டு அதி​முக சார்​பில் வெற்றி பெற்ற, மரகதம் குமர​வேல் மற்​றும் சத்​ய​பாமா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​தனர்.

அக்.6ல் இடைத்தேர்தல்

பின்னர் அவர்கள் ஆளுங்​கட்​சி​யான தவெக​வில் இணைந்​தனர். இதையடுத்​து, இத்​தொகு​தி​களுக்கு அக்​டோபர் 6ஆம் தேதி இடைத்​தேர்​தலை நடத்த தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

5 முனைப்போட்டி

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத் (அதி​முக), சுகந்தி (மார்​க்சிஸ்ட், ஜானகி​ராமன் (நாதக) உள்​ளிட்ட 28 பேர் களத்​தில் இருந்​தனர்.

தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பாமா ( தவெக), சுகன்யா (தி​முக), பானு​மதி (அதி​முக), லட்​சுமணன் (இந்​திய கம்​யூனிஸ்ட்), கார்த்​தி​கா(​நாதக) உள்​ளிட்ட 22 பேர் களத்​தில் இருந்​தனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நேற்று காலை 7 மணி முதல் இரண்டு தொகு​தி​களி​லும் வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. மதுராந்தகத்தில் பிற்​பகலுக்கு மேல் வாக்​குப்​ப​திவு விறு​விறுப்பை எட்​டியது. ஆண்​கள், பெண்​கள் என பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர்.

தாராபுரம் தொகு​தி​யில் காலை முதலே நீண்ட வரிசை​யில் நின்று வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர்.

லை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு நிறைவடைந்​தநிலை​யில்​,​இறுதி நேரத்​தில் வந்த வாக்​காளர்​களுக்​கு, டோக்​கன் வழங்​கப்​பட்டு வாக்​களிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்னர் வாக்​கு எண்​ணிக்கை மையங்​களுக்கு இயந்​திரங்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டன.

மதுராந்தகம் 86.26%, தாராபுரம் 80.30%

இறுதி நில​வரப்​படி மது​ராந்​தகம் தொகு​தி​யில் 86.26 சதவீத​மும், தாராபுரத்​தில் 80.30 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகி​யிருந்​தன.

ஏப்​ரலில் நடை​பெற்ற பொதுத்​தேர்​தலில் மது​ராந்​தகத்​தில் 92.30 சதவீத​மும், தாராபுரத்​தில் 89.9 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வா​யிருந்த நிலை​யில், தற்​போது இடைத்​தேர்​தலில் வாக்​குப்​ப​திவு குறைந்​துள்​ளது.

9ம் தேதி வாக்கு எண்ணிக்கை

9ம்​ தேதி வாக்​கு எண்​ணிக்​கை மையங்​களில்​ காலை 8 மணி முதல்​ வாக்​கு​கள்​ எண்​ணப்​பட்​டு அன்​று மாலைக்​குள்​ முடிவு​கள்​ அறிவிக்​கப்​பட உள்​ளன.

புதுச்சேரி இடைத்தேர்தல்

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின. இது கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.

============