assembly elections, Prime Minister Modi will visit Chennai on April 3  google
தமிழ்நாடு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி ஏப்.3ம் தேதி சென்னை வருகை ; ஏப்.4ம் தேதி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம்

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். ஏப்.3ல் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவர் அன்றைய தினமே சென்னை வருகிறார்.

Rohini

பாஜக அதிகாரிகளுடன் ஆலோசனை

ஏப்.4ம் தேதி சென்னை வரும் பிரதமர் ,சென்னையில் பாஜ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதே நாளில் அவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்ல இருக்கிறார் .

கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ள பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி ,வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சார பரப்புரையில் தீவிரம் கட்டிய வருகின்றனர்.

உற்சாகத்தில் பாஜக

சட்டசபை தேர்தலை ஒட்டி ,கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாஜவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம்

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து மன்னித்து கட்சிகளும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக விஜய் தனது வேட்புமனு தாக்கலை நிறைவு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினர் ,அதுபோல மற்ற மன்னித்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை தீவிர முனைப்புடன் செய்து வருகின்றன .