Assembly session commenced Governor's address, which began with a reference Anna; speech concluded in 36 minutes, google
தமிழ்நாடு

”அண்ணாவின் உரையோடு தொடங்கி, குறளோடு நிறைவு செய்த ஆளுநர் : 36 நிமிடம் பேச்சு : ”வந்தே மாதரத்திற்கு கடைசி இடம்”

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

Rohini

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய உரை

பெரும் அரசியல் பரப்பரப்புக்கு இடையே இன்று 17 ஆவது சட்டமன்ற கூட்டத்தொடரானது தமிழத்தாய் வாழ்த்துடன் தொடங்கியது .சட்டப்பேரவை உட்பட அனைத்து அரசு கூட்டங்களிலும் , மரபுபடி முதலில், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் ஒரு பக்கம்,

ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் முதலில் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மறுபக்கம் என பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் , தமிழ்த்தாய் வாழ்த்திற்க்கு முன்னுரிமையானது அளிக்கப்பட்டுள்ளது

வந்தே மாதரத்திற்கு கடைசி இடம்

பலவேறு அரசியல் சிக்கல்களுக்கிடையே ,மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் இசைக்கப்பட்டது. வந்தே மாதரம் இசைக்கவில்லை.

அண்ணாவின் வார்த்தையுடன் தொடங்கிய ஆளுநர் உரை

முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் வணக்கம் என தமிழில் ஆளுநர் தனது உரையை தொடங்கினார். அப்போது, 'ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்' என்ற அண்ணாவின் உரையை குறிப்பிட்டு பேசினார்.

மேலும், தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது என்று தவெகவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இரு மொழி கொள்கையை தொடரும், வெள்ளை அறிக்கை குறித்தும் பேசிய ஆளுநர்

தொடர்ந்து, பேசிய ஆளுநர் ,தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த, மத்திய அரசு நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தொடரும், கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்ற அனைத்து வரிகளையும் மாற்றமின்றி வாசித்தார்.

முந்தைய திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் இருமடங்காக அதிகரித்ததையும் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றததையும் குறிப்பிட்டு ஆளுநர் பேசினார்.

தமிழில்அண்ணாவின் வார்த்தையுடன் தொடங்கிய உரையானது இறுதியில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறளுடன் நன்றி, வணக்கம் தெரிவித்து சுமார் 36 நிமிடங்கள் உரையாற்றி உரையை நிறைவு செய்தார்.

==================