தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
nainar nagendiran speech செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நயினார் நாகேந்திரன் உரை
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன், "மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தே.ஜ.கூட்டணி கூட்டம் நடக்கிறது; சூரியன் இல்லவே இல்லை.
இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்காக வேலையை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது. 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்த 11 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
மோடிக்கு உற்சாக வரவேற்பளித்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு வருகை தந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.பின்னர், பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுராந்தகம் வந்தடைந்த அவருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.