Attention Passengers: Chennai Beach – Chengalpattu Suburban Trains to Halt at Guduvanchery! source:google
தமிழ்நாடு

பயணிகளின் கனிவான கவனத்திற்கு : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் இரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்!

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மெமு இரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

Kavitha prasanna

Attention Passengers: Chennai Beach – Chengalpattu Suburban Trains to Halt at Guduvanchery!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதி இரயில் பயணிகளின் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காட்டாங்குளத்தூர் இரயில் நிலையப் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கூடுவாஞ்சேரியுடன் தற்காலிகமாக நிறுத்தம்

இதன் காரணமாக, இன்றுமுதல் (மே 19) முதல் வியாழக்கிழமை (மே 21) வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் சில புறநகர் மின்சார இரயில் சேவைகள் கூடுவாஞ்சேரியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.

இது குறித்து சென்னை இரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பின் விவரங்கள் பின்வருமாறு:

இரயில் சேவைகளின் மாற்றம் குறித்தான விவரங்கள்

சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.56, காலை 11.40 மற்றும் பிற்பகல் 12.28 ஆகிய நேரங்களில் புறப்பட்டுச் செங்கல்பட்டு செல்ல வேண்டிய புறநகர் மின்சார இரயில்கள், குறிப்பிட்ட இந்த மூன்று நாட்களுக்குக் கூடுவாஞ்சேரியுடன் தனது சேவையை நிறைவு செய்து கொள்ளும். இந்த இரயில்கள் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே இயக்கப்படாது.

மெமு (MEMU) இரயில் சேவைகள்

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மெமு இரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் வரும் ரயில்கள்

அதேபோல், மறுமார்க்கமாகச் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 12.00, 1.10, 1.45 மற்றும் 2.20 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்குப் புறப்பட வேண்டிய மெமு இரயில்கள் செங்கல்பட்டிற்கு பதிலாக தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

இந்தத் தற்காலிக மாற்றங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே அமலில் இருக்கும் என்பதால், புறநகர் இரயில் பயணிகள் தங்களின் பயண நேரங்களைத் திட்டமிடும் போது இந்த அறிவிப்பைக் கருத்தில் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

=====