Attention train passengers: Night trains between Beach and Tambaram cancelled starting the 25th. source:ai
தமிழ்நாடு

இரயில் பயணிகள் கவனத்திற்கு: வரும் 25 -ஆம் தேதி முதல்... கடற்கரை-தாம்பரம் இடையே இரவுநேர ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Kavitha prasanna

வரும் 25 ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக

ரூ. 842 கோடியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் ஒருபகுதியாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளைமுதல் 30ஆம் தேதி வரையில்

இதன் காரணமாக நாளை முதல் ( 21-08-2026) 30 ஆம் தேதி வரையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

நாளைக்கு பதிலாக 25 ஆம் தேதி முதல்

இந்நிலையில், நாளை அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் காலை 4.15 மணி வரை கிட்டத்தட்ட 5 மணி நேரம் வரையில் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரநாட்களுக்கான மாற்றம் (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை)

முழுமையாக ரத்து செய்யப்பட்டவை

கடற்கரையிலிருந்து இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்குத் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டவை

திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் ரயில், கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.15, 11.20 மணிக்கு வரும் ரயில்கள் மற்றும் செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்கு வரும் ரயில்கள் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை, கடற்கரையிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

நேர மாற்றங்கள்

  • கடற்கரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் ரயில், மாற்றாக இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும்.

  • கடற்கரையிலிருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில், மாற்றாக இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும்.

ஞாயிற்றுக் கிழமைகளுக்கான மாற்றம் (ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6)

முழுமையாக ரத்து செய்யப்பட்டவை

  • கடற்கரையிலிருந்து இரவு 10.00, 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்குத் தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

  • திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்குக் கடற்கரை வரும் ரயில் மற்றும் தாம்பரத்திலிருந்து இரவு 11.00, 11.40 மணிக்கு கடற்கரை வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டவை:

  • கடற்கரையிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

  • செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20 மற்றும் 11 மணிக்கு கடற்கரை வரும் ரயில்கள் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

நேர மாற்றங்கள்

  • கடற்கரையிலிருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில், மாற்றாக இரவு 9.50 மணிக்கு புறப்படும்.

  • கடற்கரையிலிருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் ரயில், மாற்றாக இரவு 10.10 மணிக்கு புறப்படும்.

  • கடற்கரையிலிருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், மாற்றாக இரவு 10.25 மணிக்கு புறப்படும்.

    ======