Bhagyaraj, achieving success screenwriter and director, was unable to make a significant mark in politics google
தமிழ்நாடு

”எம்ஜிஆரின் கலை வாரிசு” : கருணாநிதி, ஓபிஎஸ் வரை பாக்யராஜின் அரசியல் பயணம்! : தனிக்கட்சியும் நடத்தியவர்...

திரைக்கதை மன்னனாக, இயக்குநராக வெற்றிகளை ஈட்டி, புகழின் உச்சிக்கு சென்ற பாக்யராஜ், அரசியலில் பெரிய அளவில் சாதிக்க இயலாமல் போனார்

Kannan

எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

எம்ஜிஆரால் தமது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ். எம்ஜிஆர் மறைவுக்கு அண்ணா திமுக இரண்டாக பிளவுபட்டது.

‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’

அந்த தருணத்தில் 1989-ல் எம் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் பாக்யராஜ். ஆனால் தனிக்கட்சி பயணம் வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

அதிமுகவில் இணைந்த பாக்யராஜ்

பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அங்கேயும் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை.

திமுகவில் இணைந்த பாக்யராஜ்

2006ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார் பாக்யராஜ். ஆனால் ஒரு கட்டத்தில் திமுகவிலும் பயணிக்க முடியாத நிலைக்கு ஆளான பாக்யராஜ் அரசியலில் இருந்தே ஒதுங்கி நின்றார்.

பிரதமர் மோடியை புகழ்ந்த பாக்யராஜ்

2022ல் சென்னையில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பாக்யராஜ் புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையானது.

“பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.

அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை.

ஓபிஎஸ்சை ஆதரித்த பாக்யராஜ்

2022ல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே பிரச்சனை வெடித்த போது ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசிய பாக்யராஜ், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அரசியலில் கே.பாக்யராஜ் எடுத்து வைத்த எந்த நகர்வும் வெற்றிகரமாக அமையவில்லை.

இருந்தாலும் திரை உலகில் அவர் பதித்த தனித்த அழியாத முத்திரை காலந்தோறும் ஜொலித்து கொண்டே இருக்கும்.

=========================