பிகார் சட்டமன்ற தேர்தல் :
Bihar Assembly Election 2025 Date Update : பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதி நிறைவு பெறும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதால், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு இருக்கிறது.
மூன்று கட்டங்களாக தேர்தல்? :
அதன்படி, நவம்பர் மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் மத்தியில், அதாவது நவாராத்தி விழாக்கள் முடிந்த பிறகு வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. நவம்பர் 15 முதல் 20ம் தேதிக்குள்(Bihar election 2025 result date) வாக்குகள் எண்ணப்பட்டு,
நவம்பர் 20க்குள் தேர்தல் முடிவுகள் :
இது குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: பீஹார் சட்டசபை தேர்தல் நவம்பரில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தசரா பண்டிகை முடிந்த பின் வெளியாகும். நவ., 15 முதல் 20ம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NDA vs INDIA bloc... :
தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் முழு வீச்சில் களமிறங்கி இருக்கின்றன. ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்க முதல்வர் நிதிஷ்குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக நலத் திட்டங்களை அறிவித்து, பொதுமக்களை ஈர்த்து வருகிறார்.
இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தமுறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்தக் கூட்டணில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
மேலும் படிக்க : அவமானப்படுத்தப்பட்டது எனது தாயார் மட்டுமல்ல : மோடி உருக்கம்
243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபையில் தற்போது இந்தியா கூட்டணிக்கு 131 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தியா கூட்டணிக்கு 111 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
====================