Birthday wishes for Chief Minister Vijay from Prime Minister Modi, Rahul Gandhi, and Tamil Nadu leaders.  google
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பிறந்தநாள் : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து : தமிழக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..!

முதல்வராக விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் , மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தவெகவினரால் வழங்கப்பட்டது

Rohini

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி அவர்கள், முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெர்வித்துள்ளார் .இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்த்திக்கிறேன்." என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பதிலும் நான் என்றும் உங்களுடன் துணை நிற்பேன்' - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின் ”ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்ஜோசப் விஜய் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.என்று முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

வீ தி லீடர் நிறுவனர் அண்ணாமலை.வாழ்த்து

தமிழக முதலமைச்சர் திரு விஜய்

அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்

தவெக சார்பாக மாநிலம் முழுவதும் சிறப்பு நல திட்ட ஏற்பாடு

தமிழக முதல்வராக அவருக்கு இது முதல் பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் பல்வேறு நல உதவிகள் வழங்கி, தவெகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி, அன்னதானம், ரத்த தானம், உடல் தானப் பதிவுகள் நடைபெற்றன.

=============