Birthday wishes to former Chief Minister Karunanidhi; Chief Minister Vijay, Rahul Gandhi,  google
தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் : திமுக தலைவர்கள், முதல்வர் விஜய், ராகுல் காந்தி வாழ்த்து!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Rohini

அரசியல் தலைவர்கள் வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவையும் , சிலைக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்

முதல்வர் விஜய் வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் முதல்வரும், தமிழக் வெற்றி கழகதின் தலைவருமான விஜய் நினைவு கூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து அவ்ர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு றை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன் என்று வாழத்து தெரிவித்துள்ளார்

திமுக சார்பில் மலர்தூவி மரியாதை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு , அவரது நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.திமுக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

வாழ்த்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவிட்துள்ளதாவது

கலைஞர்’ மு. கருணாநிதி அவர்கள், தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

அவர் ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல - ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் ஒரு அரசியலமைப்பில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளார்

அமைச்சர்கள் வாழ்த்து

இந்நிலையில் தமிழகத்தின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இன்று (ஜூன் 3) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் உடன் இருந்த அமைச்சர்கள்

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

திமுக அமைச்சர்களும் , தொண்டர்களும் மறந்த முத்லவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

===============