BJP Organise 7 Reginal Manadus Throughout Tamil Nadu https://x.com/BJP
தமிழ்நாடு

ஏழு இடங்களில் மண்டல மாநாடு : பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பாஜக

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வரும் பாஜக, ஏழு இடங்களில் மண்டல மாநாடுகளை நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்க்க இருக்கிறது.

Kannan

தமிழகத்தில் நான்குமுனை போட்டி? :

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள்தான். ஏப்ரலில் அறிவிப்பு வந்தால், மே முதல் வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு விடும். மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணி , ஆட்சியை கைப்பற்ற அதிமுக கூட்டணி, முதல்வர் வேட்பாளராக தனித்து களமாடும் விஜய், வழக்கம் போல தனித்து போட்டியிடும் நாம் தமிழர் சீமான் என நான்கு முனைப்போட்டி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

வியூகம் வகுக்கும் பாஜக :

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பாஜக, இந்தமுறை கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. இதற்கான கூட்டணிக்கு சில கட்சிகளை கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தி தேர்தலை சந்திக்கும் வகையில், பாஜக சார்பில் தொடர்ச்சியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் :

இந்தநிலையில், சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளையும் வழங்கினார்.

பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணிகள் தொடர்பாக உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மண்டல மாநாடுகள் :

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகளை நடத்துவது.

அதன்படி முதல் மாநாட்டை ஆகஸ்டு 17ம் தேதி நெல்லையில் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13ல் மதுரை, அக்டோபர் 26ம் தேதி கோவை, நவம்பர் 23 சேலம், டிசம்பர் 21ம் தேதி தஞ்சையில் மண்டல மாநாடுகளை நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

====