BJP Ex President Annamalai on Mayiladuthurai DSP Sundaresan Issue 
தமிழ்நாடு

விசாரணை நடத்தாமல் டிஎஸ்பி சஸ்பெண்ட்? : திமுக அரசுக்கு எச்சரிக்கை

Annamalai on DSP Sundaresan Issue : விசாரணை நடத்தாமல் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்ததை ஏற்க முடியாது என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

Kannan

மயிலாடுதுறை டிஎஸ்பி. சுந்தரேசன் :

Annamalai on DSP Sundaresan Issue : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். இவரது வாகனம் பறிக்கப்பட்டதாலல், அவர் நடந்தே காவல் நிலையத்திற்கு சென்றது தொடர்பான காணொலி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், செய்தியாளர்களை டிஎஸ்பி. சுந்தரேசன், தனக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் தருவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ய மத்திய மண்டல ஐஜிக்கு டிஐஜி பரிந்துரை செய்துள்ளார்.

எனக்கும் சட்டம் தெரியும் :

இதுகுறித்து நாமக்கல்லில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள கிட்னி திருட்டு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் இரண்டு விஷயங்களை கூறினார்கள். எனக்கு தெரியும், சீருடையில் இருக்கும் அரசு அதிகாரிகள் பத்திரிகையில் பேசக் கூடாது.

மேலும் படிக்க : பறிக்கப்பட்ட டிஎஸ்பி வாகனம்:அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சுந்தரேசன் நிலைக்கு யார் காரணம்? :

இன்றைக்கு நிலைமை அதனை எல்லாம் தாண்டி சென்றது. அதனால் தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என டிஎஸ்பி சுந்தரேசன் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அதிகாரிகள் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள்.

விசாரணை நடத்தாமல் சஸ்பெண்ட் செய்வதா? :

எந்த விசாரணையும் நடத்தாமல், டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நீதி பெற்று கொடுக்க வேண்டும்.

பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை :

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. சர்ச்சையும் இல்லை. கருத்துக்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். எல்லோருடைய கருத்துக்களும் பொதுவெளியில் இருக்கிறது. இதில் சர்ச்சைக்கு எல்லாம் ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே புள்ளியில் இருக்கிறோம்.

திமுகவை வீழ்த்துவதே இலக்கு :

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று ஒற்றைப்புள்ளியில் இணைந்து இருக்கிறோம். அது எப்படி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பும், பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட தலைவர்கள் பேசுவார்கள். எந்த குழப்பமும் இல்லை. எங்களை பொறுத்தவரை தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் ஒன்றாக இருக்கிறோம்'' என அண்ணாமலை பதிலளித்தார்.

====