BJP Former Leader Annamalai on Pudukkottai School Student Issue 
தமிழ்நாடு

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் : திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேசம்

Annamalai on Pudukkottai School : புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என அண்ணாமலை கடுமையாக சாடி உள்ளார்.

Kannan

BJP Annamalai on Pudukkottai School Issue : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளை கொண்டு கழிவறை சுத்தம் செய்யப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனம் எழுந்துள்ளன.

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் :

இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai), “புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்(Pudukkottai School), மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

மேலும் படிக்க : அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்

சீரழிந்துள்ள பள்ளிக் கல்வித்துறை :

தமிழக பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளது. அப்படி இருக்கையில், பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அமைச்சர் என்ன செய்கிறார்? :

இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி(Anbil Mahesh Poyyamozhi), நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதல்வருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும் தான்.

சட்டப்படி குற்றம்தான் :

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே?” இவ்வாறு அண்ணாமலை(Annamalai Tweet) கேள்வி எழுப்பி உள்ளார்.

====