Nagaland Governor Ela. Ganesan Passed Away 
தமிழ்நாடு

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் ’தாமரை’ : பாஜகவின் முகம் இல. கணேசன்

Nagaland Governor Ela. Ganesan Passed Away : தமிழகத்தில் பாஜகவின் முகமாக திகழ்ந்து, பட்டிதொட்டி எங்கும் தாமரை செல்ல காரணமாக இருந்தவர் இல. கணேசன்.

Kannan

ஆர்எஸ்எஸ் தீவிர தொண்டர் :

Nagaland Governor Ela. Ganesan Passed Away : தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், 1954ல் தஞ்சையில் பிறந்தார். சிறு வயதிலேயே சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட அவர் ஆர்எஸ்எஸ் இணைந்து தன்னை பட்டை தீட்டிக் கொண்டார்.

தமிழக பாஜகவில் இல. கணேசன் :

1990ல் தமிழக பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளரானார் இல. கணேசன்(Ela. Ganesan Biography). தமிழ்நாடு பாஜகவில் இன்று இருக்கும் பல நிர்வாகிகள் அவருடைய வளர்ப்பில் வந்தவர்கள் என்பது சிறப்பு. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் கிளை அமைப்புகள், கட்டமைப்பை உருவாக்குவதில் இல. கணேசன் பங்கு அளப்பரியது. இதற்காக பட்டிதொட்டியெங்கும் சென்ற அவர் தாமரையை தமிழகத்தில் வலுப்படுத்தினார்.

தமிழக பாஜக வளர்ச்சியில் முக்கிய பங்கு :

பாஜகவின் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவராகவும் இல. கணேசன் பணியாற்றினார். 2006ம் ஆண்டு தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் மிகச்சிறிய கட்சியாக இருந்த பாஜக, இவரது வழிகாட்டுதலில் படிப்படியாக வளர்ந்தது.

தமிழ் மீது அளப்பறிய பற்று :

தமிழின் மீது அவருக்கு இருந்த பற்று பாராட்டத்தக்கது. பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பு மூலம் மாதந்திரக் கூட்டங்களை நடத்தினார்.

மிகச் சிறப்பாக பேசக்கூடிய இல. கணேசன் மேடை பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தமிழ் மிக இனிமையாக இருக்கும்.

கருணாநிதியோடு நெருக்கம் :

கருத்து ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், இல.கணேசனையும், கருணாநிதியையும் தமிழ் பிணைத்து வைத்தது. கடைசிவரை கருணாநிதி மீது தனிப்பட்ட பாசம் கொண்டிருந்தார் இல. கணேசன்.

மேலும் படிக்க : இல. கணேசன் மறைவு, பிரதமர் மோடி இரங்கல் : தலைவர்கள் நேரில் அஞ்சலி

அனைவரும் மதித்த பண்பாளர் :

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர் இல. கணேசன். சர்ச்சைகளில் சிக்காமல், நேர்மையான அரசியலை முன்னெடுத்து, அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பாளர். அவரது மறைவு(Ela. Ganesan Death) பாஜகவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பேரிழப்பாகும்.

=======